இந்தியா

பீகார் சட்டசபை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த பாஜகவின் என்டிஏ அரசு

பீகார் மாநிலத்தில் பொறுப்பேற்ற முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.

என்டிஏ மாநிலங்களவை எம்.பியாக தேர்வான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் கடந்த ஏப்ரல் 14 அன்று பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

துணை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். பீகார் மாநிலத்தில் பொறுப்பேற்ற முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.

இதனிடையே அவர் தலைமையிலான புதிய அரசு மீது நேற்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்ராட் சவுத்ரி முதலில் சமதா கட்சியிலும், பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலும் இருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்ராட் சவுத்ரி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT