இந்தியா

பிஸ்லெரி பாட்டில் தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா?.. நிறுவனம் என்ன சொல்கிறது?

கண்டறியக்கூடிய அளவிலான PAH-கள் இருப்பதால், குடிநீர் விற்பனைக்கு FSSAI அனுமதிப்பதில்லை.

குடிநீர் பாதுகாப்பற்றது என FSSAI அறிவிப்புக்கு பிஸ்லெரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வகப் பரிசோதனையில், பிஸ்லெரி நிறுவனத்தின் பாட்டில் குடிநீர் பாதுகாப்பற்றது என கண்டறிப்பட்டது.

பாதுகாப்பற்றது

இந்நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே ஒரு மாதிரி மட்டுமே 'பாதுகாப்பற்றது' என அறிவிக்கப்பட்டதாகவும், தங்கள் குடிநீர் பாதுகாப்பானவை என்று பிஸ்லெரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

புற்றுநோயை உணடாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006இன் கீழ் பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளதாக FSSAI தெரிவித்திருந்தது. மேலும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்ட தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் தடை விதித்தது.

என்ன நடந்தது?

இந்நிலையில் FSSAI விதித்துள்ள விற்பனைத் தடை, 2025 செப்டம்பர் 27 அன்று கோவாவில் தயாரிக்கப்பட்ட 'GO 270' என்ற ஒரே ஒரு தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். தற்போது சந்தையில் இந்தத் தொகுதியின் கையிருப்பு இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் விளக்கத்தின்படி, FSSAI, பிஸ்லெரி தண்ணீரின் ஆறு மாதிரிகளைப் பரிசோதனைக்காகச் சேகரித்திருந்தது. அந்த ஆறு மாதிரிகளும் ஆரம்பகட்ட ஆய்வகப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றன.

இருப்பினும், மறுபரிசோதனையின்போது, ​​'GO 270' யூனிட்டை சேர்ந்த ஒரு மாதிரியில், ஒரு லிட்டருக்கு 0.144 மில்லிகிராமுக்கும் அதிகமான பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டறியக்கூடிய அளவிலான PAH-கள் இருப்பதால், குடிநீர் விற்பனைக்கு FSSAI அனுமதிப்பதில்லை.

அதே தொகுதியைச் சேர்ந்த மற்றொரு மாதிரி அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்ததாகவும், அதில் எந்தக் குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை என்றும் நிறுவனம் கூறியது.

ஒரே யூனிட்டை சேர்ந்த இரண்டு மாதிரிகளின் சோதனை முடிவுகளில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி, மறுபரிசோதனை நடத்துமாறு FSSAI-யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

SCROLL FOR NEXT