'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் “தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026” மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதன்மூலம் இனி வந்தே மாதரம் பாடல் பாடப்படும் போது வேண்டுமென்றே தடுப்பது, இடையூறு செய்வது அல்லது அவமதிப்பு செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இக்குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும்போது தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு வழங்கப்படும் அதே அந்தஸ்தை வந்தே மாதரமும் பெறும்.