இந்தியா

பீகார் முதல்வர் cheap மினிஸ்டர்: தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு

ராப்ரி தேவிக்கான அரசு பங்களாவை காலி செய்ய பீகார் அரசு உத்தரவிட்ட நிலையில், தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. இவரும் முதல்வராக இருந்துள்ளார். இவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், சாம்ராத் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ராப்ரி தேவிக்கு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அரசு பங்களா வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. சாம்ராத் சவுத்ரி தலைமையிலான பீகார் அரசு ராப்ரி தேவிக்கான அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. அத்துட பாதுகாப்பையும் குறைத்துள்ளது.

இதற்கு தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் “சாம்ராத் சவுத்ரி முதலமைச்சர் இல்லை. அவர் Cheap மினிஸ்டர் என்று நாங்கள் உங்களிடம் சொல்கிறேன். ஊழலால் நிறைந்து, அரசு கஜானா இல்லாமல் மாநில அரசு தோல்வியை திசைப் திருப்புவதற்காக எங்களுடைய பாதுகாப்பு மற்றும் பங்களா விசயத்தை கையில் எடுத்து மலியாக யுக்தியை கையாள்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT