இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை- பிரதமர் மோடி புகழாரம்

100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி முதல் முறையாக 3 இலக்க பதக்கத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இது அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனையாகும். 100 பதக்க மைல்கல்லை எட்டி வியக்கத்தக்க சாதனையால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் இந்த வரலாற்று சாதனைக்கு வழி வகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் நம்மை பெருமைப்படுத்திவிட்டனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.