இந்தியா

டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் ஆடிய பாங்ரா நடனம்: இணையத்தில் வைரல்

டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் ஆடிய பாங்ரா மற்றும் கித்தா நடனம் இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

டெல்லியில் பல்கலைக்கழக மாணவிகள் இரண்டு பேர் பஞ்சாபி நாட்டுப்புற நடனமான பாங்க்ராவிற்கு ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில், டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் இரண்டு பேர் பஞ்சாபி நாட்டுப்புற நடனத்தை அரங்கேற்றினர்.

டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் ஆடிய பாங்ரா மற்றும் கித்தா நடனம் இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

டெல்லி ஸ்ரீராம் கல்லூரி மாணவியான சனா பகிர்ந்த அந்த காணொளியில், அவர் மற்றொரு பெண்ணுடன் இணைந்து மிஸ் பூஜாவின் 'ஆஷிக்' என்ற பஞ்சாபி பாடலுக்கு பாங்ரா மற்றும் கித்தா நடனங்களை ஆடுவது இடம்பெற்றிருந்தது.

குர்தா ஆடை அணிந்திருந்த அந்த இரண்டு பெண்களையும், சக மாணவிகள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இன்ஸ்டா பதிவு

மேலும் அவர் அந்த பதிவில், இவ்வளவு குறுகிய காலத்தில் எனக்கு பாங்ரா மற்றும் கித்தா நடனத்தை கற்றுக்கொடுத்த தனது சக நடன கலைஞருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

இதைதொடர்ந்த அவரது பதிவில், தனக்கு பஞ்சாபி நாட்டுப்புற நடனத்தில் எந்த பயிற்சியும் இல்லை என்றும், அதனால் அதனை மறந்துவிட்டதால் தன்னை மன்னிக்கும் படியும் சனா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவிகள் பகிர்ந்த பாரம்பரிய பஞ்சாபி நடன வீடியோ இணையத்தில் பகிர்ந்து வைரலானது. மாணவிகள் பதிவிட்ட வீடியோவிற்கு, பயனர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில், இந்த நடனம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், நமது கலாச்சாரத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியமைக்கு நன்றி எனவும் பதிவிட்டார்.

மேலும் மற்றொரு பயனர், கடினமான நடன அசைவை சிறப்பான கால் அசைவுடன் மிகச்சாதாரணமாக ஆடியுள்ளீர்கள் என பதிவிட்டார்.

SCROLL FOR NEXT