டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சண்டை போட்டது, ஆபாச செயல்களில் ஈடுபட்டது, மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றது என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பெங்களூருவில் மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்ஜோடி மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில் மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகளுக்கு அருகே இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட தம்பதி மீது மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.