இந்தியா

PM Modi | மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்... பிரதமர் மோடி

குஜராத்தில் பா.ஜ.க. இப்போது தொடர்ச்சியாக நான்கு தலைமுறையினரின் விசுவாசத்தை பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குஜராத் வந்தடைந்தார். ஜாம்நகரில் உரையாற்றிய அவர், உள்ளூர் பெருமிதத்தையும் மேற்கு வங்கத்தின் அரசியல் சூழல் குறித்த கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார். வங்காளத்தில் நடக்கும் தேர்தல்கள் "வேறு எங்கும் இல்லாதவை" என்றும், பாஜக மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறினார்.

ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வாக்காளர்களின் "பெருகிவரும் ஆசீர்வாதங்களுக்கு" தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், குஜராத்தில் பா.ஜ.க. இப்போது தொடர்ச்சியாக நான்கு தலைமுறையினரின் விசுவாசத்தை பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "குஜராத் தொழில்துறையில் மட்டும் முன்னணியில் இல்லை; காலநிலை மாற்றத்திற்கென ஒரு பிரத்யேக அமைச்சகத்தை கொண்ட ஒரே மாநிலம் நாங்கள்தான். வங்காளத்தில் தேர்தல்கள் நாட்டின் வேறு எந்தப் பகுதியையும் போல் இல்லை. அங்கு மாற்றத்தை கொண்டுவர பா.ஜ.க.வுக்காக ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.

300-க்கும் மேற்பட்ட நமது தொண்டர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்த மக்களின் துயரத்தைக் கற்பனை செய்து பாருங்கள். வங்காளத்தின் தற்போதைய நிலை ஒரு ஆழமான பள்ளத்தில் உள்ளது. அதன் பெருமையை மீட்டெடுக்க பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் ," என்று கூறினார்.