இந்தியா

திருப்பதி மலை பாதையில் கரடி - அதிர்ச்சியில் பக்தர்கள்

குப்பைத் தொட்டியில் பக்தர்கள் வீசி சென்ற உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சில பக்தர்கள் நடைபாதையாக சென்று தரிசனம் செய்கின்றனர். சிறுத்தைகள் நடைபாதை அருகே அடிக்கடி வந்ததால் பக்தர்கள் கடும் அச்சமடைந்தனர்.

நடைபாதை அருகே சுற்றித்திரிந்த சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு விட்டன. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் நடைப்பாதை தொடக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே பெரிய கரடி ஒன்று வந்தது. அங்குள்ள குப்பைத் தொட்டியில் பக்தர்கள் வீசி சென்ற உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கரடி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.