பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று எஸ்பிஐ, ஐசிஐசிஐ, கனரா வங்கி மற்றும் எச்டிஎப்சி உள்ளிட்ட நாட்டின் முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சில மாநிலங்களில் மே 27 அன்று பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிறை அறிவிப்புகளுக்குப் பிறகு மே 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தத் தேதி மாற்றத்தைத் தொடர்ந்து டெல்லி, தெலங்கானா மற்றும் பல மாநில அரசுகள் இன்று வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் வங்கிகள் செயல்படாது.
வங்கி விடுமுறை மட்டுமன்றி, இந்தியாவின் பங்குச் சந்தைகளும் செயல்படாது.