இந்தியா

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது எப்.ஐ.ஆர் பதிவு

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு தொடர்பு உள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்தில் நடந்த மாணவர் தலைவர் உஸ்மான் பின் ஹாதியின் படுகொலை, அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளிகள் சிலர் வங்கதேசத்தில் இருந்து தப்பி, மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் மேற்கு வங்க சிறப்புப் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் 2 அன்று கொல்கத்தாவின் தர்மதலா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்த சம்பவம் குறித்து மறைமுகமாக தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

அதாவது, "வங்கதேசத்தில் நடந்த ஒரு முக்கியக் கொலை வழக்கு குறித்த முழு விவரங்களும் எனக்குத் தெரியும்; அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

அந்த தகவல்களை நான் வெளியிடப் போவதில்லை, அவ்வாறு வெளியிட்டால் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாகக்கூடும்" என்று கூறினார்.

மம்தா பானர்ஜியின் இந்த உரையைத் தொடர்ந்து, சிலிகுரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரிங்கி சென் சட்டர்ஜி என்பவர் சிலிகுரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

"அவரது பேச்சு, இந்த கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்புகளுக்கோ அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கோ ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போன்ற தவறான செய்தியை மக்களிடையே கொண்டு சேர்க்கும்" என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற போலீசார் மம்தா மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிந்துள்ளனர். இது அரசியல் பழிவாங்கல் என திரிணாமுல் காங்கிரசார் குற்றம்சாட்டி வருகின்றனர்.