இந்தியா

ஜாகிர் நாயக் அறக்கட்டளை மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் அந்த அமைப்பை ஒரு சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் நிறுவிய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (IRF) மீதான தடையை மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது . சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் அந்த அமைப்பை ஒரு சட்டவிரோத சங்கமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது

மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் இந்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும், குறிப்பாக அதன் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக், வெவ்வேறு மத சமூகங்களுக்கு இடையே பகைமை, வெறுப்பு மற்றும் பகைமையை வளர்ப்பதில் தங்கள் ஆதரவாளர்களை ஊக்குவிப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் பல்வேறு மதத்தினரிடையே பகைமையையும் வெறுப்பையும் தூண்டுவதாகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இளைஞர்களைப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச செயற்கைகோள் தொலைக்காட்சி வலையமைப்புகாள், இணையதளம், சமூகவலைதளங்கள் வழியாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் முன்னிலையில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.எஃப்-இன் செயல்பாடுகள் உடனடியாகத் தடை செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அந்த அமைப்பு தனது நாசவேலைகளைத் தொடரக்கூடும் என்றும், உறுப்பினர்களை மேலும் அணித்திரட்டக்கூடும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அமைப்பு மத நல்லிணக்கத்தைக் குலைத்து, நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சீர்குலைத்து, தேசவிரோத உணர்வுகளைப் பரப்பி, ஆதரவளிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த அமைப்பு முதன்முதலில் 2016-ஆம் ஆண்டு நவம்பரில் தடை செய்யப்பட்டது. பின்னர் 2021-ஆம் ஆண்டில் தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு ‘தாவா’ என்ற மதப்பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாவா என்பது இஸ்லாமிய மதத்தை பிறரை தழுவச் செய்யும் பணி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மையம் ஒன்றையும் தொடங்கி வழிநடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT