6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாகப் புதிய வரைவு விதிகளை FSSAI தற்போது முன்மொழிந்துள்ளது.
FSSAI வெளியிட்டுள்ள இந்த புதிய வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அவகாசத்திற்குள் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி விதிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் அது சார்ந்த இதர சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பக் காலத்திலேயே செயற்கை சர்க்கரைகளைத் தவிர்ப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.