இந்தியா

பக்ரீத் பண்டிகைக்கு விடப்படும் விடுமுறை ரத்து - மேற்குவங்க பாஜக அரசு

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பக்ரீத் விடுமுறையை ஒரு நாளாக குறைத்து அரசாணை வெளியிட்டது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மேற்கு வங்கஅரசு, இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் விடுமுறை நாட்களை குறைத்து அறிவித்துள்ளது.

மாநில நிதித்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பொது விடுமுறை இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மே 28ம் தேதி மட்டும் பொது விடுமுறையாக அறிவித்து, அதற்கு முந்தைய தேதிகளில் நிர்வாகப் பணிகளை தவறாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளை கட்டாயமாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காளைகள், எருதுகள், பசுக்கள், கன்றுகள் மற்றும் எருமைகள் உள்ளிட்ட விலங்குகளை வெட்டுவதற்கும் சுவேந்து தலைமையிலான பாஜக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.