இந்தியா

மேற்கு வங்க பிஸ்லெரி குடிநீரிலும் பாக்டீரியா: இரண்டாவது சட்ட நடவடிக்கை மேற்கொண்ட FSSAI

தங்கள் குடிநீர் பாதுகாப்பானது என்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் பிஸ்லெரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பிரபல குடிநீர் பாட்டில் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மீண்டும் ஒரு சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ஆய்வக பரிசோதனை மற்றும் நடவடிக்கை

பிரபல குடிநீர் பாட்டில் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மீண்டும் ஒரு சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிஸ்லெரி ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர எஃப்எஸ்எஸ்ஏஐ அனுமதி அளித்துள்ளது.

கழிவுநீர் கசிவு அல்லது சேதமடைந்த குழாய்கள் வழியாகத் தண்ணீரில் கலக்கக்கூடிய இந்த பாக்டீரியா கண்டறியப்பட்டது நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதன்மை மற்றும் பரிந்துரை ஆயவகப் பரிசோனைகளில் , அந்த குடிநீரில் கோலிஃபார்ம் பாக்டீரியா (Coliform bacteria) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர்க் கசிவு அல்லது சேதமடைந்த குழாய்கள் வழியாக இந்த வகை பாக்டீரியா நீரில் கலக்க வாய்ப்புள்ளதாக கண்டயறிப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பேட்ச்

ஜூலை 20, 2026 அன்று தயாரிக்கப்பட்ட PB 201 என்ற குறிப்பிட்ட பேட்ச் குடிநீர் விற்பனைக்கு FSSAI ஆகஸ்ட் 12, 2026 அன்றே தடை விதித்தது.

இந்த நிலையில் கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையின் குடிநீர் மாதிரியில் புரோமேட்மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (கியவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாகக் கூறி, கடந்த வாரம் FSSAI வழக்குத் தொடர அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் எடுக்கப்பட்ட இரண்டாவது சட்ட நடவடிக்கை இதுவாகும்.

முன்னதாகக் கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக புரோமேட் ரசாயனம் இருந்ததால் அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பிஸ்லெரி மேல்முறையீடு செய்த நிலையில் பரிந்துரை ஆய்வக சோதனையிலும் பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உணவு பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே தங்கள் குடிநீர் பாதுகாப்பானது என்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் பிஸ்லெரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

SCROLL FOR NEXT