உ.பி. அயோத்தி ராமர் கோவிலை நிர்வாகிக்கும் ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளை நன்கொடை கோடிக்கணக்கில் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறைப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு தீவிர கதியில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தனர்.
சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்து திருட்டில் ஈடுபட்டதாக அறக்கட்டளை ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மோசடியின் பின்னணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் அடுக்கடி ராமர் கோவில் சென்று வந்தது இந்த திருட்டை மேற்பார்வை இடத்தானா? என அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அகிலேஷ் பேசுகையில், "சிசிடிவி காட்சிகள் திருத்தப்பட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையே தெரிவிக்கிறது.
நடந்து வரும் திருட்டைக் கண்காணிப்பதற்காக மட்டுமே அயோத்திக்கு வருகை தந்து முதலமைச்சர் சாதனை படைத்தாரா? இத்தனை முறை வருகை தந்தும், கோயில் வளாகத்திற்குள் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு ஏன் தெரியாமல் இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.