ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், சிலக்கலூரி பேட்டை மாவட்டம், ஏலூருவை சேர்ந்த 15 பேர் பாபட்லா மாவட்டம், கொண்டமஞ்சலூரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு நேற்றிரவு ஆட்டோவில் சென்றனர்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டம் முடிந்து இன்று அதிகாலை ஆட்டோவில் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
விஜயவாடா-திருப்பதி சாலையில் வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ், ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு குண்டூர் மற்றும் சிலக்கலூரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி குண்டூர் ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிலக்கலூரி பேட்டை ஆஸ்பத்திரியில் ஒருவரும் இறந்தனர்.
போந்த பாபு (வயது 62), மனேம்மா (55), லட்சுமம்மா ( 75), கங்கம்மா (55), மரியம்மா (45), சம்பூர்ணம்மா (70), சுவர்த்தா (45) என தெரியவந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.