அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் 126 இடங்கள் உள்ளன. அவற்றுக்கு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை 64 இடங்களை கடந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அங்கு கடந்த 2021 இல் அமைந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சி தொடர்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.