பிரத்யுத் போர்டோலோய் 
இந்தியா

Congress |அசாமில் பரபரப்பு: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா

சட்டசபைத் தேர்தலுக்கு 20 நாள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மாலை மலர்

அசாம் மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், அசாமில் மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யான பிரத்யுத் போர்டோலாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பியுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு 20 நாளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பிரதியுத் போர்டோலோயின் மகன் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மார்கெரிட்டா தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.