இந்தியா

விமானப்படை தலைமை தளபதியாக அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு.. யார் இவர்?

வியூகம் வகுப்பதில் தேர்ந்தவராக தீட்சித் அறியப்படுகிறார்.

விமானப்படை தலைமை மார்ஷல் அஷுதோஷ் தீட்சித் சனிக்கிழமையன்று இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றார்.

விமானப்படை தலைமை தளபதி ஏ.பி. சிங் ஓய்வுபெற்ற நிலையில் புதிய தலைமைத் தளபதியாக ஏர் சீப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பதவியேற்றார்.

இதனிடையே 43 ஆண்டுகள் நீண்ட சேவைக்கு பிறகு ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங் ஓய்வுபெற்றார்.

புதிய தலைமை தளபதி அசுதோஷ் தீட்சித் ஆபரேஷன் சிந்துரில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார். வியூகம் வகுப்பதில் தேர்ந்தவராக தீட்சித் அறியப்படுகிறார்.

அஷுதோஷ் தீட்சித்

தற்போது தலைமை தளபதி பதவியேற்பதன் முன் அவர் இந்திய விமானப் படையின் துணைத் தலைமைத் தளபதியாக இருந்தார்.

அதற்கும் முன்பு, தீட்சித் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில், படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.

40 ஆண்டுகளாக ராணுவப்பணியில் உள்ள தீட்சித் தேர்ந் போர் விமானி ஆவார்.

இவர், மிராஜ்-2000, ஜாகுவார், மிக் விமானங்கள், தேஜஸ், ஹாக், கிரண், ஏஎன்-32, ஐஎல்-78 மற்றும் பிற விமானங்கள் உட்பட பல்வேறு விமானங்களில் 3,500 மணி நேரத்திற்கும் மேலான பறக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

ஆபரேஷன் சபேத் சாகர், ஆபரேஷன் ரக்ஷக், காப் இந்தியா, ஆபரேஷன் சிந்துர் மற்றும் பிற முக்கிய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

தீட்சித், ஒரு விமானப் பயிற்றுவிப்பாளரும் ஆவார். அவர் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் விமானப்படை சோதனை விமானிகள் பள்ளியில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார்.

SCROLL FOR NEXT