இந்தியா

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ரூ.3.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்

இந்நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 70,158 பேர் தரிசனம் செய்தனர்.24,801 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.