டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதில் அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினர் ஐந்து பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கடந்த முறை நடைபெற்ற SIR பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தற்போதைய SIR பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொருந்தவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால், அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவால், கெஜ்ரிவால் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிாவல், அவரது தாயார் கீதா தேவி, மகன் புல்கித் கெஜ்ரிவால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.