ஜார்கண்ட மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை கைதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். இன்று அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.
இதற்காக இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரையுடன் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சட்டசபைக்கு வந்தார். சட்டசபைக்குள் வந்ததும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத் என முழங்கினர்.