இந்தியா

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 

SCROLL FOR NEXT