புது டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் சுத்திகரிப்பான்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் அலுவலகம் சார்ந்த முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளவர்களை மட்டும் தலைமையகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.