இந்தியா

J&K: பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வீரர் பலி

'ஆபரேஷன் ஷேராவாலி' என்ற பெயரில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நாவடிக்கையின்போது போது கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் 'ஆபரேஷன் ஷேராவாலி' என்ற பெயரில் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆபரேஷனில் 16வது நாளான நேற்று மாலை, லெப்டினன்ட் பீரேஷ்வர் கோஸ்வாமி செங்குத்தான குறுகிய மலைச்சரிவுப் பாதையில் வீரர்களுடன் முன்னேறிச் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாகக் கால் தவறி ஆழமான மலைப் பள்ளத்தாக்கில் விழுந்தார்.

சக வீரர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவரின் வீரமரணத்திற்கு ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

அவரின் தியாகம், இந்திய ராணுவத்திற்கு எப்போதும் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும் என தனது அறிக்கையில் ராணுவம் தெரிவித்துள்ளது.