ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி
இந்தியா

இந்தியா கேட்டில் அங்கிதா பண்டாரி பெற்றோர் போராட்டம்: நேரில் சென்று சந்தித்த ராகுல், பிரியங்கா காந்தி

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பெயர் அடிபடுகிறது.

இந்திய ஜனாதிபதி மாளிகை நேற்று முன்தினம் ஆளுநர் நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. சிக்கிம் மாநில ஆளுநராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

யார் இந்த துஷ்யந்த் கவுதம்

68 வயதான துஷ்யந்த் கவுதம் முன்னதாக பாஜக-வின் தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், SC பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள விடுதியில் வரவேற்பாளராக இருந்த அங்கிதா பண்டாரி என்பவரின் சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலை குற்றச்சாட்டில் துஷ்யந்த் கவுதம் பெயர அடிபட்டது, அப்படிப்பட்டவருக்கு எப்படி கவர்னர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆட்சேபனைக்குரியது என்கிறது காங்கிரஸ்

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியல், "ஆளுநராக நியமிக்கப்பட்டது நேரடியாக துஷ்யந்த் கவுதமை காப்பாற்றும் முயற்சியாகும். ஏனென்றால், ஆளுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் அவரது பெற்றோர்களால் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்ட முக்கியப் பிரமுகரை ஆளுநராக நியமிப்பது, உத்தரகண்ட் மாநிலப் பொதுமக்களின் உணர்வுகளைக் கடுமையாகப் புண்படுத்துவதற்குச் சமமாகும்.

இதற்கிடையில், சிபிஐ விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை; மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் (FIR) பதிவு செய்யவில்லை. இத்தகைய ஒருவரை ஆளுநர் பதவியில் நியமிப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது" எனத் தெரிவித்திருந்தார்.

அங்கிதா பண்டாரி பெற்றோர் போராட்டம்

இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் அங்கிதா பண்டாரியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்னளர். அங்கிதா பண்டாரி கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ வழக்கு முடியும் வரை துஷ்யந்த் குமார் கவுதமின் ஆளுநர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

SCROLL FOR NEXT