ஆந்திர பிரதேசத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டி ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தனது கட்சித் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜெகன்மோகன், எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது என நாம் பார்த்தோம்.
2 மாநிலத்திலும் ஏராளமான வாக்காளர்களை நீக்கிவிட்டனர். மம்தாவின் பபானிபூர் தொகுதியில் 45,982 பேரை நீக்கினர். அவர் தோல்வியை தழுவினார்.
தமிழ்நாடடில் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் எஸ்.ஐ.ஆர் மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவரும் தோல்வி அடைந்தார்.
வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் ஆபத்து என்பதை அம்மாநில தேர்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. தொண்டர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய தரவுகளின்படி கொளத்தூரில் சுமார் 1.2 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.