தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தள பதிவில் அவர், "பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழ்நாடு சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக என்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும். மேலும், தமிழ் பண்பாடு மற்றும் பெருமையை நிலைநாட்டவும், வலுப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடும்.
தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அயராது உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.