மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியல் சார்பான அறிக்கைகள் வெளியிடக்கூடாது என உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கீ அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான தகுதித் தேர்வை (NEET) நடத்துகிறது. இந்த வருட படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு நடைபெற்ற பின்னர், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாளில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.
இதனால், பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
இதனால் ஒரு தேர்வை சரியாக நடத்த முடியவில்லை. உயர்க்கல்வி சீர்குலைந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தியது.
இரண்டு நடைபெறவில்லை. இதனால் கடந்த மாதம் காலவரையற்ற போராட்டத்தை ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடங்கினர். நேற்று இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
இருந்தபோதிலும், ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கீ, தனது மாணவர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ரிஜிஸ்டர் ஆபிஸ் மூலமாக அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவுறுத்தலில் "அரசியல் அறிக்கைகள் வெளியிட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனுமதி இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய கருத்துகள் மத்திய அரசுடனான ஐ.ஐ.டி.யின் உறவில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் லீக் தொடர்பான இன்று பிரதமர், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மத்தியில் பேசினார். அப்போது இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.