இந்தியாவில் உள்ள அமேசான் வாடிக்கையாளர்களுக்கான அடுத்த 10வது ப்ரைம் டே ஆஃபர் திருவிழா வரும் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்று நாள் விற்பனை திருவிழா வரும் ஜூலை 4 அன்று நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி, ஜூலை 6 அன்று இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது. இது ப்ரைம் உறுப்பினர்களுக்கு 72 மணிநேர சலுகைகளை பெறும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த ஆன்லைன் விற்பனை பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே. இதில் அனைத்து முன்னணி தயாரிப்பு பொருட்களுக்கும் தள்ளுபடிகளை அள்ளி வழங்குகிறது.
பிரத்யேக சலுகைகள், புதிய தயாரிப்புகள் அறிமுகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறுகிறது. இந்த முறை அமேசான் ப்ரைம் டே-யின் 10வது பதிப்பு என்பதால், ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் கூடுதல் தள்ளுபடிகளை வழங்குகிறது.
இந்த விற்பனையின் போது, எஸ்பிஐ அல்லது ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாங்கும் போது, ப்ரைம் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக 10 சதவீத உடனடித் தள்ளுபடி கிடைக்கும்.
அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்கள் வாங்கும்போது 5 சதவீத கேஷ்பேக் பெறலாம்.
குறிப்பாக, 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, அமேசான், மைல்கற்கள், சேமிப்பு சிறப்பம்சங்கள் மற்றும் விருப்பமான ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தும் AI-ஆற்றல் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட ‘பிரைம் பிளேபேக்’-ஐ வழங்குகிறது. இது ஜூன் 18 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரைம் உறுப்பினர்களுக்குக் மட்டும் காண்பிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிரைம் தினத்தில், OnePlus மற்றும் Samsung போன்ற முன்னணி பிராண்டுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் தயாரிப்புகளும் இந்த விற்பனையில் இடம்பெறும்.
ப்ரைம் தினத்தின் 10வது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, அமேசான் புதிய சந்தாதாரர்களுக்குக் குறிப்பிட்ட கால உறுப்பினர் சலுகைகளையும் வழங்குகிறது. வழக்கமான வருடாந்திர பிரைம் உறுப்பினர் சந்தா ரூ.1,499-க்கு பதிலாக ரூ. 999-க்குக் கிடைக்கும், அதே நேரத்தில் பிரைம் லைட் சந்தா ரூ.1,499-லிருந்து ஆண்டுக்கு ரூ. 599 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ப்ரைம் ஷாப்பிங் எடிஷன் அதன் தற்போதைய விலையான ரூ.399-லிருந்து, ஆண்டுக்கு ரூ.299-க்குக் கிடைக்கும்.
இந்த விற்பனையின்போது பொருட்களை வாங்குபவர்கள் அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later) சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டு பிரைம் டே விற்பனையில், எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், அலெக்ஸாவுடன் கூடிய ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஃபயர் டிவி சாதனங்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், சாம்சங், ஒன் பிளஸ் போன்ற பிராண்டுகளின் 500க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளும் களமிறங்குகின்றன.