காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், "அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்க வேண்டும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
In view of the unprecedented announcements from Washington DC, there is now a need, more than ever before, for -1. The PM to chair an all-party meeting and take political parties into confidence 2. A special session of Parliament to discuss the events of the last eighteen…