உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லக்னோவில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், நல்ல நாட்கள் வரவே இல்லை; ஆனால் கெட்ட நாட்கள் முடிவுக்கு வரப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தேர்தல் அறிக்கை மையமாக கொண்டிருப்பதோடு, தலித், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னைலைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதியின் தேர்தல் அறிக்கையில், “பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 40,000 வழங்கப்படும்; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 5,000 வழங்கப்படும்.
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்; கிராமப்புரங்களில் உள்ள வீட்டு உபயோக நுகர்வோருக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, ட்ரோன் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
நிரந்தர பணி நியமனம் பெற முடியாத அக்னிவீரர்களுக்கு மாநில காவல்துறை மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் மாணவிகளுக்கு மிதிவண்டி மற்றும் சூரியசக்தி விளக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.