காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுடன் சொத்து மதிப்பு குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அந்த பிரமாண பத்திரத்தில் 38.76 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையக்கூடிய சொத்து 11.37 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. இதில் தன் பெயரில் 6.60 கோடி ரூபாய் அளவிற்கும், மனைவி பெயரில் 4.41 கோடி ரூபாய் அளவிற்கும் அசையக்கூடிய சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
8.31 கோடி ரூபாய் மதிப்பிற்கு அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய பெயரில் 8.31 கோடி ரூபாய்க்கும், மனைவி பெயரில் 9.86 கோடி ரூபாய்க்கும், Hindu Undivided Family கீழ் 9.22 கோடி ரூபாய்க்கும் அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தன்னிடம் மற்றும் மனைவியிடம் சுமார் ரூ. 2.04 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.