அர்னாப் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒடிசாவில் 5 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கஞ்சம் மாவட்டத்தில் 10 பேர் மாயமானதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் உருவான அர்னாப் புயலால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து, அக்டோபர் 28 அன்று ஒடிசாவின் கஞ்சம்-கந்தமால் எல்லையில் உள்ள ஒரு மலை உச்சி கிராமமான கிடிபாபாலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (நவ.1) இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தீயணைப்புப் படையினர் இரண்டு உடல்களை மீட்டனர்.
மாயமான 10 பேரைக் கண்டறிய தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. நிலச்சரிவில் இருந்து தப்பிய 13-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஜி.உதயகிரி அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.