சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னுட்டு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தனது ஊழியர்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "அதானி குழுமம் தனது வணிகத்தில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சியை எட்டி வருகிறது.
கடந்த 35 ஆண்டுகளில் குழுமம் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை உருவாக்கியுள்ளது ஆனால் தற்போதுள்ள வலிமையான உள்கட்டமைப்பு மற்றும் திறமையால் இந்த ஒரே ஆண்டில் மட்டும் கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்ப்போம்" என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைவதில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறிய அவர் குழுமத்தின் திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அவ்வாறு அவர் கூறியதாவது, "உத்தரபிரதேசத்தில் மீரட் - பிரயாக்ராஜ் இடையேயான கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்டம், 8 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றும்.
தாராவி மறுசீரமைப்பு வெறும் கட்டுமானத் திட்டம் மட்டுமல்ல, மனித மாற்றத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் சவாலான முயற்சியாகும்.
உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி திட்டமாக கவ்டா பசுமை எரிசக்தி திட்டம் சந்ததியினருக்குத் தூய்மையான ஆற்றலை வழங்கும்.
முந்ரா மற்றும் விழிஞம் றைமுகங்கள் இந்தியாவின் கடல்சார் வணிகத்தை சர்வதேச அளவில் வலுப்படுத்தும்.
நவி மும்பை விமான நிலையம் நாட்டின் பெருமைக்குரிய அடையாளமாக அமையும்" என்று தெரிவித்தார்.