விசாகப்பட்டினம் மாவட்டம் கொண்டய்யா வலசாவைச் சேர்ந்தவர் நடுபுரு ராமேஸ்வரி (வயது31). இவருக்கும் அனகா பள்ளி மாவட்டம் வடச்சிபுருபள்ளியை சேர்ந்த இருகுலா நரசிங்க ராவ் (42) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
மணப்பெண் ராமேஸ்வரி, அவரது தாய் கனகமகாலட்சுமி மற்றும் சகோதரி வரலட்சுமி ஆகியோர் கணவருடன் வீட்டிற்குத் திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர்.
அவர்கள் சென்ற கார், உக்கு பொது மருத்துவமனை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் தன் கணவருக்கு அருகில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்த ராமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தாயார் கனக மகாலட்சுமி (56) படுகாயமடைந்து கே.ஜி.எச்.மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். ராமேஸ்வரியின் கணவர் நரசிங்கராவ் மற்றும் சகோதரி வரலட்சுமி ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருமண வீடு சோகமாக மாறியது.