இந்தியா

அசாமில் வேன் - கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 23 பேர் உயிரிழப்பு!

பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே இன்று (நவ.13) பயணிகள் வேனும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வேனில் பயணித்த பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு போகாட்டிலிருந்து நாகோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோஹோரா மாதிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் படுகாயமடைந்தவர்கள் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்

அதிவேகம்

தேசியப் பூங்காவிற்கு அருகில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மீறி, அந்த வேன் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என கோலாகாட் காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்நநீல் தேகா தெரிவித்துள்ளார்.

இந்த வேனின் உரிமையாளர் இதுவரை 12 முறை ரூ.38,500 அபராதம் செலுத்தியுள்ளதாகவும், ரூ.4000 அபராதம் கட்டாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இரங்கல்

இந்த விபத்திற்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட அவர், அவர்கள் விரைவில் குணமடையும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மன வலிமை கிடைக்கவும் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT