இந்தியா

Aadhaar update: குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பித்தலுக்கான கட்டணம் ரத்து

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுகிறது. ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மாலை மலர்

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், 7 முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண தள்ளுபடி கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்ததாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.