இந்தியா

வானில் இன்று அபூர்வ நிகழ்வு: பிரகாசமாக காட்சி தரும் ‘சனிக்கிரகம்’

சூரியன் மறையும் நேரத்தில் உதித்து, சூரிய உதயம் வரை இது தெரியும்.

பூமி, சூரியனுக்கும், சனிக்கிரகத்துக்கும் நேர் நடுவே வரும்போது வானில் அபூர்வ நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதால் சனிக்கிரகத்தை மிகத்தெளிவாகவும், பிரகாசமாகவும் பார்க்க முடியும்.

வெறும் கண்ணால் பார்க்கும்போது இது ஒரு பிரகாசமான புள்ளி போல மட்டுமே தெரியும். ஆனால், சாதாரண சிறிய தொலை நோக்கி (அதாவது டெலஸ்கோப்) மூலம் பார்த்தால் சனியின் புகழ்பெற்ற வளையங்களை காண முடியும். சூரியன் மறையும் நேரத்தில் உதித்து, சூரிய உதயம் வரை இது தெரியும்.

பூமி ஆண்டுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால் சனி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 29.5 ஆண்டுகள் ஆகும். பூமியின் சுற்றுப்பாதை சிறியது. அது சனியை விட வேகமாக நகர்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை, பூமி சனிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்கிறது.

வானியலாளர்கள் இதை 'எதிர்நிலை' என்று அழைக்கிறார்கள். சனிக்கிரகத்தைக் காண்பதற்கு, இந்த ஆண்டின் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக இன்று அமையும். சனிக்கிரகம் எதிர்நிலை 378 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது.

இதற்கு முந்தைய நிகழ்வு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி நடந்தது. அடுத்த நிகழ்வு 2027-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி அன்று நடைபெறும். எதிர்நிலை என்பது சனிக்கு மட்டும் உரியதல்ல.

SCROLL FOR NEXT