இந்தியா

தாயை கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

தன் தாய் மீதான தாக்குதல் பற்றி பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டான்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது தாயைக் கத்தியால் குத்திவிட்டு, மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

அசாமின் கவஹாத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த சிறுவன், பாமுனி மைதம் பகுதியில் தாயுடன் வசித்து வந்தான்.

சிறுவன் வெறிச்செயல்

நேற்று முன் தினம் இரவு சிறுவன் வீட்டில் வைத்து தாயை கத்தியால் குத்தியுள்ளான். அதன்பின் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி, தன் தாய் மீதான தாக்குதல் பற்றி பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டான்.

தன் வீட்டைக் கண்டுபிடித்து தன் தாய்க்கு உதவுமாறு தன் வகுப்புத் தோழர்களிடமும் அவன் கேட்டுக்கொண்டான்.

தற்கொலை

பின்னர் அவன் நகரின் ஏபிசி பகுதிக்குச் சென்றான். அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து அவன் தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.

தாயின் நிலை

படுகாயங்களுடன் வீட்டில் கிடந்த சிறுவனின் தாய் மீட்கப்பட்டு கவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

SCROLL FOR NEXT