இந்தியா

மேற்கு வங்கத்தில் 91.78 சதவீத வாக்குகள் பதிவு

மாலை 5 மணி வரை சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மேற்கு வங்க மாநிலத்தில் 152 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு வாங்குப்பதிவு தொடங்கியது. ஆனால், வாக்களிக்க மக்கள் ஆர்வாக முன்னதாக திரண்டனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கும் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் தொண்டர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். பாதுகாப்புப்படையினர் மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையெல்லாம் மீறி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

மாலை 5 மணி வரை சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 6 மணி நிலவரப்படி 91.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.