மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவதற்கான ஊதியக் குழுவை அமைக்கும். இந்த குழு பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசனை நடத்தி அதன்பின் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும்.
1.1 கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவதற்காக 8-வது ஊதியக்குழு கடந்த 2025-ல் அமைக்கப்பட்டது. 18 மாதத்திற்குள் இந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி அடுத்த வருடம் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிட்பென்ட் பேக்டர் பார்முலா
இந்த குழுவிடம் இந்திய இரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளது. பொதுவாக பிட்பென்ட் பேக்டர் பார்முலா (Fitment Factor Formula) என்பதுதான் சம்பளம் உயர்வுக்கான நடைமுறையில் முக்கியமானது. இதை தற்போதைய அடிப்படை சம்பளத்துடன் பெருக்கினால் புதிய சம்பளம் கிடைக்கும்.
இந்த பிட்பென்ட் பேக்டர் பார்முலா ஒரே மாதிரியாகத்தான இருக்கும் 7-வது ஊதியக்குழு அமைகக்ப்பட்டு சம்பள உயர்வு பெற்றபோது, 2.57 ஆக இருந்து.
ஆனால், முக்கியமான இந்திய ரெயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் தற்போது 5 பகுதியாக வகைப்படுத்தி பிட்பென்ட் பேக்டர் பார்முலா-வை பரிந்துரை செய்துள்ளது.
லெவல் 1 முதல் 5-க்கு 2.92 பிட்பென்ட் பேக்டர்
லெவல் 6 முதல் 8-க்கு 3.50 பிட்பென்ட் பேக்டர்
லெவல் 9 முதல் 12-க்கு 3.80 பிட்பென்ட் பேக்டர்
லெவல் 13 முதல் 16-க்கு 4.09 பிட்பென்ட் பேக்டர்
லெவல் 17 முதல் 18-க்கு 4.38 பிட்பென்ட் பேக்டர்
இதை ஊதியக் குழு ஏற்றுக் கொண்டால், மிகப்பெரிய அளவில் பிரமாண்டாக சம்பள உயர்வு இருக்கும்.
உதாரணத்திற்கு மத்திய ஊழியர் ஒருவ்ர 2.5 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்குகிறார். அவர் லெவல் 18 முதல் 18-க்குள் வந்தால், அவருக்கு 4.38 பிட்பென்ட் பேக்டர் பார்முலா படி சம்பளம் உயரும். அதாவது அடிப்படை சம்பளத்தை 4.38-ஆல் பெருக்க வேண்டும். அப்படியென்றால் அவருடைய சம்பளம் சுமார் 11 லட்சம் வரை உயரும்.
லெவல் 6 முதல் 8 லெவனில் உள்ள ஊழியர் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றால். அவருக்கு பிட்பென்ட் பேக்டர் பார்முலா 3.50 ஆகும். அதன்படி சம்பளம் 1.57 லட்சம் ரூபாயாக உயரும்.
National Council-Joint Consultative Machinery அடிப்படை சம்பளம் 69 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. Bharatiya Pratiraksha Mazdoor Sangh அடிப்படை சம்பளம் 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு மத்திய அரசு தயாராகுமா? என்பது கடினமான ஒன்றுதான்.