புதுடெல்லி:
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், 2019ம் ஆண்டு மார்ச் 1 நிலவரப்படிமத்திய அரசுத் துறைகளில் 9,10,153 காலியிடங்களும், மார்ச் 1, 2018 நிலவரப்படி 6,83,823 இடங்களும் இருந்ததாகவும், 2020ம் ஆண்டு மார்ச் 1 நிலவரப்படி 8,72,243 பணியிடங்கள் காலியாக இருந்தாகவும் கூறி உள்ளார்.
2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் பணியாளர் தேர்வாணையம், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மற்றும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலம் 2,65,468 பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய இணை மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... நீட் தேர்வில் இருந்து காப்பாற்றுங்கள்: மு.க.ஸ்டாலினை பதாகையுடன் சந்தித்த ஆந்திர மாணவர்