ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டம், உதய்பூர்வதி , சப்போலி கிராமத்தில், சிமென்ட் கலவை இயந்திரம் ஒன்று 11,000 வோல்ட் உயர் அழுத்த மேல்நிலை மின்கம்பியுடன் மோதியதில், எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
சாபோலி மற்றும் கடம்குண்ட் இடையே ஒரு குறுகிய சாலை அமைக்கும் பணி உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் இந்த பணி நடந்து வந்துள்ளது.அப்போது, சரளை கற்களைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட கலவை இயந்திர வாகனம் (மிக்சர் இயந்திரம்) அங்கிருந்த 11,000 வோல்ட் (11-kV) உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியுள்ளது. இதனால் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்
சரளைக் கற்களைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம், மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பியுடன் தொடர்பு கொண்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக உதய்பூர்வதி காவல் நிலைய அதிகாரி ராம்பால் தெரிவித்தார்.
உதய்பூர்வதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்போலி கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.சரளைக் கற்களைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஒன்று, மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பியுடன் தொடர்பு கொண்டதாக காவல் நிலைய அதிகாரி (SHO) உதய்பூர்வதி ராம்பால் தெரிவித்தார்.
அந்த இயந்திரத்தில் உயர் அழுத்தக் கம்பியுடன் உரசிக் கொண்டு அதன் வழியே மின்சாரம் பாய்ந்து அங்கு வேலை செய்து கொண்டிருண்டஹ் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்க்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
சப்போலிக்கும் கடம்குண்டுக்கும் இடையேயான வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு சாலை அமைக்க அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் அருண் கார்க் தெரிவித்தார். உள்ளூர் கிராமவாசிகள் தாங்களாகவே சாலை அமைப்பதற்காக ஒரு கலவை இயந்திரத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
சில கிராமவாசிகள் அந்த இயந்திரத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அது ஒரு மின் கம்பியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டதாகவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கார்க் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இதற்கிடையில், எரிசக்தி அமைச்சர் ஹீரா லால் நகர் இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.இவ்விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ராஜதான் முதல்வர் பஜன்லால் சர்மா இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இது நடந்துள்ளதாகக் கூறி, அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளூர் கிராம மக்கள் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.