பீகாரில் 2016 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை இருவர், வெள்ளிக்கிழமை மூவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி லால் கிஷோர் ராய் மற்றும் லட்டு ஷா ஆகிய இருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 பேரில், 6 பேர் தங்களது பார்வையை முழுமையாக இழந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.