இந்தியா

ஒரே ஆண்டில் 6வது சம்பவம்.. டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியின் சாவ்ரி பஜாரில் கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

டெல்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகே உள்ள காலி சித்தாராவில், காலை 9:50 மணிக்கு கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து ஒரு சடலத்தையும் மீட்டனர்.

இந்த விபத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லி விபத்துகள்

இந்த ஆண்டில் டெல்லியில் நிகழும் ஆறாவது பெரிய கட்டிட இடிபாட்டுச் சம்பவம் இதுவாகும்.

இதற்கு முன்னர் சாகேத், ரோகிணி, கரோல் பாக், சத்ய நிகேதன் மற்றும் சீமாபுரி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்தவை உட்பட 5 சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்தனர்.

இதில் குறிப்பாக சத்யா நிகேதன் பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் தங்கியிருந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், அடித்தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்த கட்டிடம் முறையான உரிமம் இன்றி பிஜியாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT