இந்தியா

சத்தீஸ்கரில் சரக்கு ரெயில்மீது பயணிகள் ரெயில் மோதல்: 6 பேர் பலி

பயணிகள் ரெயில் முன்னால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில்மீது மோதியது. இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.

இந்நிலையில், இந்த ரெயில் பாதையில் இன்று பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் ரெயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில்மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.

இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர்.

இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT