இந்தியா

Rajyasabha Election | தலைமையின் உத்தரவை மீறி வாக்கு- 6 பி.ஜே.டி எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்

ஒடிசாவில் பாஜக 3 இடங்களையும், பிஜேடி (BJD) ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

இந்தியாவின் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அதற்கான வாக்குப்பதிவு கடந்த 16ம் தேதி அன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 6 இடங்களுக்கும் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக (Unopposed) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 9ம் தேதி வெளியானது.

மொத்தம் 37 இடங்களில் பல மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். ஆனால் பீகார், ஒடிசா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பலப்பரீட்சை நிலவியது.

இதில், ஒடிசாவில் பாஜக 3 இடங்களையும், பிஜேடி (BJD) ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலின்போது, கட்சித் தலைமையின் உத்தரவை மீறி வாக்கு அளித்ததாகக் கூறி, பிஜு ஜனதா தளம் கட்சியின் 6 எம்.எல்.ஏ-க்களை தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் திலிப் ராய்க்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.