இந்தியா

சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.53,000 கோடி நிதி.. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற தகுதிகள் தளர்வு - இந்திரா காந்தி பெயரை நீக்க முடிவு

கால அளவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை திட்டங்களில் இருந்து இந்திரா காந்தி பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் இயங்கி வந்த நான்கு முக்கிய சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை திட்டங்களின் பெயர்கள், பிரதமரின் பெயரில் மாற்றப்படவுள்ளன.

இதன்படி முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 4 திட்டங்களுக்கு 'பிரதமரின் சாமாஜிக் சஹாயதா திட்டம்' என பெயர் வைக்கப்பட உள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தளர்வு

மேலும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை பலன்களை அதிகமானோர் பெறும் வகையில், தகுதி நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தற்போது 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதியம், இனி 40 சதவீத ஊனம் உள்ளவர்களுக்கும் கிடைக்கும்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பிலிருந்தே இந்த நிதிப் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

நிதி

வரும் ஆண்டுகளில் இந்த திட்டங்களைத் தொடர்வதற்காக ரூ.53,000 கோடி நிதியுதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கால அளவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT